Description
வளமார்ந்த மலைநாடு ஈராயிரம் மேற்கடலில் சேரநாட்டு இத்தகைய ஆண்டுகளுக்கு முன்னரே வாணிகத்தில் தலைசிறந்து விளங்கிற்று. அக்காலத்தில் சேர நாட்டுக் கடற்கரையில் முசிரி என்ற துறைமுக நகரம் செழிப்புற்றிருந்தது. சோழ நாட்டுப் பெருந்துறைமுகம் காவேரியின் ஆற்று முகத்தில் அமைந்திருந்தது போலவே சேரநாட்டுத் துறைமுகமாகிய பெரியாறு கலக்கும் இடத்தில் அமைந்திருந்தது. விரை பொருள்கள் எல்லாம் அத்துறைமுக நகரத்தில் குவிந்தன. அவற்றை நாடிப் பிற நாட்டு வணிகர்கள் கடல் வழியாகவும், தரை வழியாகவும் வந்து மொய்த்தார்கள். ‘பொய்யறியாப் புலவர்” என்று தமிழ்நாடு போற்றும் பரணர், முசிரியின் சிறப்பினைப் பாடினார். அப் பாட்டைப் புறநானூற்றிலே காணலாம். அவர் பாட்டிற் கண்ட செய்தியை அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புக்கள் வலியுறுத்துகின்றன.
Reviews
There are no reviews yet.