Description
சமயவுணர்வு வீரவாத கல்வி இளைஞர் உள்ளத்தில் மக்கட் பண்பை விளைவிக்கும் மாண்பின்றியிருக்கிறதென்பது கல்வியாளர் பலரும் கருதும் கருத்து. சமய நூல்களிற் பற்றின்மையும் சமய நூலாசிரியரிடத்தில் மதிப்பின்மையும் இன்றைய இளைஞர் உலகில் இடம்பெற்றிருப்பதற்குக் காரணம் மேலே சொன்ன முடிவுதான் என்பர். இதற்கு இளைஞர் பயிலும் நூல்களிடையே சமய நூல்களின் மாண்பும் அந்நூலாசிரியர்களின் அருட்சிறப்பும் எளிதில் விளங்கத்தக்க வகையில் சில பல கருத்துக்களைத் தருவது நலம் பயக்கும் என்பது பலரும் உரைப்பதொன்று. இன்னோரன்ன கருத்துக்களை மனத்திற் கொண்டே ஒவைத் தமிழ் என்ற பெயரால் இக்கட்டுரைத் தொகை நூல் வெளியிடப் பெறுகின்றது.
Reviews
There are no reviews yet.