Description
அந்தாதியாவது, முன் நின்ற பாட்டின் இறுதி எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் பின் வரும் பாட் டின் முதலாக வர, ஈறும் முதலும் மண்டலித்து முடியப்பாடும் திருவகைப் பிரபந்தம். பண்டைத் தண்டமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தின்படி இந்நூல் “விருந்து” என்னும் வனப் பமைந்த தொடர்நிலைச் செய்யுளாம். இது “விருந்தே தானும் புதுவது கிளந்தயாப்பின் மேற்றே”, என்ற செய்யுளியற்குத்திரத்தாலும், “விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத்தாம் வேண்டியவாற்றாற் பல செய்யுளுந்தொடர்ந்து வரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது”, என அதற்குப் பேராசிரியர் கூறிய உரையாலும் பெறப்படும்.
Reviews
There are no reviews yet.