Description
அல்லாஹ்வின் அன்பினால், மிகப் பெரிய பொறுப்பு ஒன்றை நிறைவேற்றும் வேலை எனக்கு இலேசாக அமைந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ‘இஸ்லாம் பாடம்’ படிப்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அப்பொழுது, நான் படித்த காலத்தில் பிற சமயத்தவரின் மிகப் பெரிய புராணங்களை எளிய, இனிய தமிழில் சிறிய புத்தகங்களில் வாசிக்க வாய்ப்பு இருந்தது. அதேபோல், “முஸ்லிம் பிள்ளைகள் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களின் சரிதையை வாசிக்கவாய்ப்பில்லாமல் இருக்கிறார்களே’ என்று நான் கவலைப்பட்டேன். அந்தக் கவலையை நீக்கிக்கொள்வதற்காக நானே சிறுவர்க்கான ஒரு நூலை எழுதவேண்டும் என்று நினைத்தேன்.அதற்கான சந்தர்ப்பம், இப்பொழுது தான் கிடைத்தது. என் இயன்றவரையில், சிறந்த முறையில் சிறுவர்க்கென்றே இதனை எழுதினேன்.
Reviews
There are no reviews yet.