Description
தொற்றுவியாதிகளுக்கு ஆகாரமான, கண்ணுக்குத் தெரியாத துளிப்பூச்சிகளின் செய்தியெல்லாம் நாட்டுவைத்தியர் படித்ததில்லை. மருந்துகளின் தொழில் மர்மங்களெல்லாம் நன்றாகத் தெரியவேண்டுமானால் ரஸாயன சாஸ்திரம் கற்றிருக்க வேண்டும். நாட்டு வைத்தியருக்கு அந்த சாஸ்திரம் தெரியாது, நாட்டு வைத்தியத்தால் ஜனங்கள் பிழைப்பது ஒரு ஆச்சரியமேயன்றிவேறில்லை.” நாட்டு வைத்தியத்தின் கட்சியார் சொல்லுகிறார்கள்: அந்த ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் ராஜாங்கத்தார் எளிய தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்களானால் நாங்கள் படித்துக் கொள்ளுவதில் ஆக்ஷேபமில்லை. ஆனால் வைத்தியனுக்கு முக்கியமாக வேண்டியது நோய் தீர்த்துவிடுதலே. இதில், இந்த தேசம்ஸம் பந்தப்பட்டவரை, ஐரோப்பிய வைத்தியரைக்காட்டிலும் எங்களுக்கு அதிகத்திறமையுண்டு.
Reviews
There are no reviews yet.