Description
நாட்டுப் பாடல்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது. அப்பாடல்களின் வாயிலாகத் தமிழக வரலாற்றை உற்று நோக்குவோர் உள்ளனர்; காலத்திற்குக் காலம் மாறி வந்துள்ள பழக்க வழக்கங்களை அவற்றின் வாயிலாக ஆராய்வோர் இருக்கின்றனர்; மக்கள் இலக்கியம் என்று அவற்றைப் போற்றுவோர் தோன்றிவிட்டனர்; அப்பாடல்களின் இசையமைப்பு வடிவம் ஆகியவற்றை நோக்க இசைக் கலைஞர்கள் முன் வந்துள்ளனர்; அவற்றில் உள்ள மொழியமைப்பு சொல்லாட்சி, வட்டார வழக்கு ஆகியவற்றைக் கவனிப்போர் பெருகி வருகின்றனர்.
Reviews
There are no reviews yet.