Description
எல்லா உலகும் எழில்பெறக்காக்கும் வல்லவனுக்கே எல்லாப் புகழும். சிந்தையள்ளும் சீருப்புராணம் எனும் செழுந்தமிழ்க் காப்பியம் இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெறும் அனைத்துத் தகுதிகளையும் கொண்டது. காப்பியப் பொருளோ மிகப் பெரிது; காப்பியச் சிறப்பும் பொருளுக்குத் தக்க புலமைத்திறத் தோடு கூடியது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் காப்பியம், தகுதியளவுக்கு மக்கன் மத்தியில் புகழ் பெறவில்லை; பயின்றரும், எடுத்தாள்வாரும், பேசுவாரும், எழுதுவாரும் குறைவு. இந்து புலவர் குறையன்று; நாம் பண்ணிய புண்ணியக் குறைவேயென்று கொண்டு, காப்பியம் பரவப் பல்லாற்குறும் பணியாற்றலே பொருத்த முடையதாகும்.
Reviews
There are no reviews yet.