Description
ஒருநாள் அந்திப்பொழுது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரை மிக அழகாக விளங்கியது. அலையலையாகக் கடல் அனுப்பும் மடிப்புக்களும், வானத்தின் சிவந்த ஒளியும் பார்க்கப் பார்க்க இனிமையாக இருந்தன. அந்தக் கடற்கரையிலே மீன் பிடிக்கும் செம்படவர்களும், படகோட்டிகளும் குடிசை கட்டிக் கொண்டிருந்தார்கள். கடற்கரையின் அழகைக் கொஞ்சம் குறைப்பதாக இருந்தன அந்தக் குடிசைகள். அந்த அந்தி வானத்தின் அழகைப் பருதிச் கொண்டே சோழநாட்டு அமைச்சர் அம்பலவாணர் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் கையைப் பிடித்த படி ஏழு வயதுச் சிறுவனான வேலநாதன் நடந்து கொண்டிருந்தான்.
Reviews
There are no reviews yet.