Description
ஆலவாய்ச் சொக்கநாதன் அமர்ந்து தமிழாய்ந்த தலைச்சங்கம் கண்ட மதுரை மண்ணில் – வள்ளுவரின் நெறி பரப்பும் ஓர் கழகமாய் உருப்பெற்றது – “ மதுரைத் திருவள்ளுவர் கழகம் “ மொழி நலம் பேணும் மதிநலம் மிக்குடையோராய்த் திகழ்ந்த பாண்டிய மன்னர்கள் பைந்தமிழ் நாளும் வளர்ந்து வளம் சேர்க்க வேண்டி மதுரையில் தமிழ்ச்சங்கம் கண்டனர் அதுபோல பொதிகை மலைச் சாரலின் தோன்றலாய் வள்ளுவர் நெறி பரப்பும் வாழ்வு உடையோராய் விளங்கிய ‘திருக்குறள் களஞ்சியம்’ தி.ப.சுப்ரமணிய தாசு அவர்களின் வேண்டுதலாலும் தூண்டுதலாலும் 1941 ஆம் ஆண்டில் தோற்றம் பெற்றது இக்கழகம்.
Reviews
There are no reviews yet.