Description
800 (எண்ணூறு) வருடங்களுக்கு முன்னர் இவர்களால் இயற்றப்பெற்ற நூற்கள் ஒவ்வொன்றும் இன்று வரை மேல் நாட்டினராலும் பொன்னே போற்றப்படுகின்றன.இமாம் அவர்களின் ஜீவிய சரித்திரமும், அவர்களால் இயற்றப்பெற்ற நூற்களும் ஆசியா, ஐரோப்பா முதலிய தேசங்களின் பல
பாஷைகளிலும் பிரசுரிக்கப்பெற்றிருக் கின்றன. இமாம் அவர்களின் ஜீவிய சரித்திர சம்பந்தமாக எழுதப்பெற்ற நூற்களிலெல்லாம் அல்லாமாஷிப்லீ
அவர்களால் எழுதப்பெற்ற “ அல் கஸ்ஸாலீ ” என்னும் நூலே மிக்க சிறந்ததாகும். ஷை “ அல் கஸ்ஸாலீ” நூலையே அடிப்படையாக வைத்து சா. சா. மவுலவி அப்துல் காதிர் ஸாஹிபு அவர்களைக்கொண்டு இஃதெழுதப்பெற்றது.என்னும் இமாம் அவர்களாலியற்றப்பெற்ற நூற்களெவை? அவைகளின் தன்மைகளென்ன? அவர்களின் கல்வித் திறமையென்ன? எவரெவர்களிடம் அவர்கள் கல்வி கற்றிருக்கின்றார்கள்? அவர்களிடங் கல்வி கற்றவர்கள் எவர்கள்? அவர்களால் இவ்வுலகுக்கேற்பட்ட நன்மைக ளென்ன? சிறப்பாக முஸ்லிம்களுக்கேற்பட்ட நன்மைக் என்ன? என்ற இவைகள்யாவும் பரிசீலனை முறையில் மிக தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் வரையப்பெற்றிருக்கின்றன.
Reviews
There are no reviews yet.