Description
எல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் முப்பது சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டதால்தான். ‘உள்ளாட்சி நிர்வாகத்திற்கு முஸ்லிம் பெண்கள் வரமாட்டார்கள்;வர வாய்ப்பில்லை.’ என்பதையொட்டியே வந்த இந்த விவாதப் பரிமாறலை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. உமட்டல் ஏற்படுகிறது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பெரும்பான்மையான ஊர்களை – பெண்கள் தொகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதால்
அதற்குத் தயார் நிலையில் முஸ்லிம் பெண்கள் இல்லை என்றாலும், அவர்கள் நிர்வாக நிலைக்கு உயர வேண்டும் என்பதில் நமக்குக்கருத்து வேறுபாடு கிடையாது.ஆனால், மேற் சொன்ன பெண்மணிகளை உதாரணமாகக் கொள்ள முடியாது. முஸ்லிம் பெண்களுக்கு இவர்கள் முன்மாதிரியாக மாட்டார்கள்.இவர்கள் முஸ்லிம்கள் என்பதைவிட, முஸ்லிம் பெண்ணுக்குரிய பண்புகள் இவர்களிடத்தில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் எவரும் பின்பற்றுவதற்குரியவர்களாகக் கொள்ளமுடியும். தலைவிகளாக வந்துவிட்டார்கள் என்ற ஒன்றே தகுதியாகிவிடமுடியாது.
Reviews
There are no reviews yet.