Description
அவ்வளவு பழங்காலத்திலேயே இந்நாட்டில் இஸ்லாமிய நெறி இடம் பெற்றிருந்தும்,இன்றமிழ் இஸ்லாமிய இலக்கியங்கள் மிகப்பிற்பட்டே உருவாகியுள்ளன.இதற்குரிய காரணங்கள் ஆய்ந்து நோக்குதற் சூரியன. ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து தோன்றிய முந்நூற்றிற்கும் அதிகமான புலவர்களின் நூற்கள் நமக்கு இன்று கிடைத்துள்ளன.இவை தவிர, மறைந்த ஏடுகளும், மறைக்கப்பட்ட ஏடுகளும், செல்லரித்த ஏடுகளும்,நெருப்புக்கிரையான ஏடுகளும் பற்பல. இன்று கிடைத்துள்ள ஏடுகளைப் பற்றியும் பொதுவாகத் தமிழகம் எதுவுமறியா நிலையிலுள்ளது. உமறுப் புலவர், மஸ்தான் சாகிப் ஆகிய பெரும்புலவர்கள் மட்டுமே நாட்டு மக்களின் நாவிலே இடம் பெற்றுள்ளனர்.
Reviews
There are no reviews yet.