Description
இம்மொழியானது தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளாகியும் பழமைக்குப் பழமையாய்ப், புதுமைக்குப் புதுமையாய் இளமை நலம் குன்றாது இயல்வது புதுப் பொருள் ஒன்றைக் கண்டால் அதற்கும் ஆக்கச்சொல் அமைய இருப்பது; அதில் மெல்லிய சுருங்கிய சீரிய கூரிய தீஞ்சொல்வளம் பெருக்குவது; அறம் தருவது ; கலைகொழிப்பது; இன்பை; அன்பை ஊட்டுவது; ஆக்கம் அருள்வது; ஊக்கம் கொடுப்பது; வீரம் விளைப்பது; காதல் கனிவிப்பது; வெற்றியளிப்பது. பின்னும் ‘எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால், இல்லாத எப்பொருளும் இல்லை’ என்னும் மொழிக்கு இலக்காக இலங்குவது.
Reviews
There are no reviews yet.