Description
“எதற்காகத்திருக்குறளுக்குப் புதுஉரை ” என்றார், கல்வி கேள்விகளிற் சிறந்தவராகிய அன்பர். ஒரு “திருக்குறளுக்குச் சரியான உரை இல்லை. அதற்காக” என்றேன். “ஏன் பரிமேலழகர் உரைக்கு என்ன” என்றார். “பரிமேலழகர் உரைதான் பழைய உரைகள் எல்லாவற்றிலும் சிறந்த உரை. ஆனால், அவருடைய உரையும்கூடத்திருவள்ளுவருடைய கருத்துக்களுக்கு ஒத்ததாக இல்லை” என்றேன். “அப்படிச்சொல்லுகிறீர்கள் பரிமேலழகர் பல சாஸ்திரங்களையும் ஆராய்ந்து ஒத்தபடி உரை செய்திருக்கிறார். அப்படிப்பட்ட உரையை சரியான உரையல்லவென்பது வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்திக்கொண்டார் என்று அப்படி அவர் நிறுத்திக்கொண்டது என் மீது கடுப்பான சொல் எதையும் பிரயோகிக்கக் கூடாது என்ற கருணையினால் தான் என்று கருதிய நான், “பரிமேலழகர் நான் வணங்க வேண்டிய பெரியவர்; அவரை நான் அவமதிப்பதாகத்தாங்கள் நினைத்துவிடக் கூடாது.
Reviews
There are no reviews yet.