Description
இஸ்லாமிய வரலாற்றில், நாற்பெருங் கலீபாக்களில் மூன்றாவது ஸ்தானத்தை வகித்த ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு, புனித ரத்தத்தினால் எழுதப்பட்டதாகும்.தானத்திலும் – தயாள இதயத்திலும், சாந்தத்திலும் – சற்குண சீலத்திலும், தீரத்திலும – தியாக சிந்தையிலும் இணையற்று விளங்கி,இஸ்லாமிய சரித்திரத்தைப் புனித வழியில் அழைத்துச் சென்ற உத்தமத் திலகங்களில் ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு.இஸ்லாத்தைக் குலைக்க விரும்பிய வஞ்சகர்கள் விரித்த வலையில், சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் சிக்கி இதயம் படைத்த உத்தமர் உஸ்மான் (ரலி) அவர்களைத் தன்னலக்காரர் எனத் தூற்றி இஸ்லாத்தின் கலீபா பதவிக்கு இழிவு கற்பித்தபோது, தன் பரி சுத்த உயிரையும் அர்ப்பணித்து, மாசையகற்றிய மனிதருள் மாணிக்கமாக ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் சரித்திர உலகில் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.