Description
கவிஞர்களது வரலாறு சமுதாயத்தினதும், நாட்டினதும் வரலாறாகக் கணிக்கப்படுகின்றது. “கவிஞர்களது வர லாறு காலத்தின் வரலாறு” என்பர். இந்த உண்மையை உணர்ந்து நமது புலவர்களதும்.அறிஞர்களினதும் வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிவைக்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய சமுதாயம் நன்கு உணர்ந்துள்ளது.ஆசிரியர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் அவர்கள் பத்துத் தலைப்புக்களில், அருள்வாக்கியின் வாழ்க்கை விவரங்களையும் இலக்கியப்பணிகளையும். பல செய்யுட்களின் ஆதாரத்துடன் கூறி,அவரது இஸ்லாமிய ஞானம், இலக்கியப் புலமை போன்றவற்றையும் விளக்கியுள்ளார்.”இலக்கிய இன்பம்” என்ற பகுதியில் அருள்வாக்கி வின் நூல்கள் சில அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந் நூல்களின் கவிதைச் சிறப்புக்களையும் அலங்கார வண்ண அமைப்புக்களையும் வாசக அன்பர்கள் சுவைத்து இன்புறத் தக்க வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர்.நூல் சிறிதாயினும் அதற்கான தகவல்களைத் தேடிப் பெறுவதில் ஆசிரியர் எடுத்துள்ள முயற்சி போற்றத் தக்க தாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Reviews
There are no reviews yet.