Description
நபி பெருமானாவர்களது முக்கியமான தோழர்களில் ஒருவர் ‘ஹஸ்ரத் ஸல்மான் பார்ஸி (ரலியல்லாஹு அன்ஹு) என்பவர். ஈரானியரில் இவரே முதலாவதாக இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய திருத்தூதருக்கும் பிரியராயிருந்தார். பெருமானாவர்களின் அந்தரங்க நேசராயிருந்தார். ஸஹாபிகள் எனப்படும் நாயக தோழர்களெல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். பெருமானாரவர்கள் காலத்திற்குப் பிறகும் மக்கள் அவரை மதித்தார்கள். இரண்டாம் கலீபா ஹஸ்ரத் உமர் காலத்திலே, ஈரான் நாட்டிலே, ஹஸ்ரத் ஸல்மான், மதாயின் பிரதேச கவர்னராக இருந்தார். இத்தனை சிறப்புகள் இருந்தும் அவர் மிகவும் எளிய வாழ்க்கை நடத்தினார். மக்களிடம் மிகவும் பணிவுடன் நடந்தார். அவரது உடலிலும் உயிரிலும் இஸ்லாம் ஊறி நின்றது. அவர் உண்பதும் இஸ்லாம். உறங்குவதும் இஸ்லாம். எண்ணும் எண்ணமும் இஸ்லாம். இஸ்லாமியப் பணி செய்தே இன்புற்றார். ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்து ஏற்றம் பெற்றார்.
Reviews
There are no reviews yet.