Description
அந்தப் பெரியார்களின் அடிச்சுவடைப் பின்பற்றிநடந்தவர்களே இன்று ‘வலி’மார்கள் என்றும் ‘குத்பு’மார்கள் என்றும் மக்களால் போற்றப் படுகின்றனர். உலகத்தில் அவதரித்த நபிமார்களுக்கெல்லாம் சீடர் களும் பக்தகோடிகளும் இருந்தே வந்திருக்கின்றனர். எனினும் அவர்களில் பெரும்பாலோர் கஷ்டம் வரும் போதும் எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகும்போதும் அந்த நபிமார்களைக் கைவிட்டுவிட்டனர். இயேசுநாதரை அரசாங்கத்தாருக்குக் காட்டிக்கொடுத்தது அன்னாருடைய சிஷ்ய கோடிகளில் ஒருவரே என்பதை விவிலிய வேதமான பைபிளே ஒப்புக்கொண்டிருக்கிறது. நபிகள் பெருமானவர்களின் சீடர்களான ஸஹாபாக்கள் எதிரிகள் வந்து தாக்கும்போதெல்லாம் தமது உயிர்களைத் தியாகம் பண்ணி அன்னாரைக் காப்பாற்றி இருக்குகின்றனர் என்பதை எதிரிகளும் ஏற்றுக்கொள்கின்றனர்
Reviews
There are no reviews yet.