Description
வையைக் கரையில்-வளமார் மதுரையில் வாழ்ந்த காலத்தே நான் ஆற்றிய சொற்பொழிவுகள் பல; எழுதிய கட்டுரைகள் பல. அவற்றுள் ஒரு சிலவே இந்நூலில் இடம் பெறுகின்றன. பின்னும் வேண்டுவனவற்றை வாய்ப்புளதேல் தொகுத்து வெளியிட எண்ணியுள்ளேன்.வையைக் கரையில் உள்ளத் தெழுந்த எண்ணங்களே இப்பேச்சுக்களையும் சொற்பொழிவுகளையும் உருவாக்கினமையின் இந்நூலுக்கு “வையைத் தமிழ்” என்றே பெயர் இட்டேன். ‘வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி’யின் மடியில் தவழ்ந்தும் இயைந்தும் நான் தமிழ் மாணவனாக இருந்து பெற்ற உணர்வு அலைகளே இந்நூலுக்கு ஊற்றாகும். வையைக் கரையில் நான் ஆசிரியனாக இருந்தேன் என்பதைக் காட்டினும் மாணவனாக இருந்து அறிவு வளரப்பெற்றேன் என்பதே பொருந்தும்.
Reviews
There are no reviews yet.