Description
கொடை மணம் கமழும் மண் கூத்தாநல்லூர். பேராசிரியர் நூர்மைதீன் அந்நல்லூரின் மைந்தன். இறைவன் நாட்டப்படி அவர் 29-1-92 அன்று எங்களைப் பிரிந்தார். அவர் மறைந்தாலும் அவர் நினைவு வாழ்ந்து கொண்டிருக்கிறது; என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ! அதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு ! பேராசிரியர் நூர்மைதீன் வாழ்ந்த காலமெல்லாம் உழைத்தார்-பிறருக்குத் தொண்டு செய்தார். அவரது முயற்சியால் பயன்பெற்ற மாணவர்கள் ஏராளம். தான் கற்று, பணியாற்றிக் கொண்டிருந்த ஜமால் முகம்மது கல்லூரியின் வளர்ச்சி பற்றிய எண்ணமே வாழ்வாய்க் கொண்டிருந்தார்.
Reviews
There are no reviews yet.