Description
பொருளியலின் தத்துவச் சாரமாக அமைகிறது என்று கொள்ளலாம். வள்ளுவம் காட்டுகின்ற பொருளியல் சமுதாயம் இந்த ஒரு கூற்றின் அடிப்படையிலே அமைவதாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவர் பொருளியல் வல்லுநர்களுக்குள் ஒரு வல்லுநராகத் தன் கூர்த்த மதி நுட்பத்தால் இன்றிருக்கும் பொருளியல் வித்தகர்களும் மறுக்காது ஏற்றுக்கொள்ளும் உண்மைகளை விளக்கியுள்ளார். இது வியப்பிலும் வியப்பாக இன்றுள்ளோருக்குத் தோன்றத்தான் செய்கிறது. இன்றைய பொருளாதாரப் பிரச்னைகள் பலவற்றிற்கு ஒரு சான்முதார நூலாகக் கொள்வது சால்புடையதாகும். அடுத்து இக்கட்டுரைத் தொகுப்பில் வள்ளுவரின் பொது நிதிக் கொள்கை, வணிகவியல் தத்துவம், பொருளியல் சமுதாயம், சொத்துரிமை, தொழிலமைப்பு, தனி மனிதத்துவம், உழவின் சிறப்பு, உற்பத்திப் பெருக்கம் போன்ற பல பொருள்களைப் பற்றிக் கருத்தரங்கில் பங்கு கொண்ட பேராசிரியர்கள், எளிதில் புரிந்து கொள்ளவும் ஆழ்ந்து சிந்திக்கவும் தங்கள் விளக்கங்களை எடுத்துரைக்கும் பாங்கிளை மிகவும் பாராட்டவேண்டும்.
Reviews
There are no reviews yet.