Description
திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர்களுக்குத் தெவிட்டாத அறிவுவிருந்து. எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பிறகும், எவ்வளவோ அரசியல், சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும், திருவள்ளுவரின் நூல் இன்று நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றேர் ஒருவரின் தெளிந்த வாய்மொழி போல் விளங்குகிறது. இவ்வளவு உயர்ந்த நூலைப்பற்றி ஒரு சொற் பொழிவு நடைபெறுகிறது என்றால், அது பலருடைய உள்ளத்தையும் கவர்தல் இயற்கை. சொற்பொழிவு ஆற்றுகின்றவர் தேர்ந்த பேச்சாளர் என்றால் இச் சிறப்புப் பலமடங்கு ஆவதும் இயற்கையே.
Reviews
There are no reviews yet.