Description
இதற்கெனவே ஐக்கிய முன்னேற்றம் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. களம் ஆனா கானா அவர்களையே தலைவராகவும் ஆக்கினார்கள். அப்பொழுது அவர்கள், இலங்கை கொழும்பில் இரண்டாம் குறுக்குத்தெருவில் ஒரு காசுக்கடை முதலாளியாகக் கொடிகட்டிப் பறந்தார்கள். 29.5.1945ல் கொழும்பிலேயே ஆறரை இலட்ச நிதிக்கு அடிகோலினார்கள். அப்பொழுதே ஐம்பத்தொரு ஆயிரம் அள்ளி வழங்கினார்கள். அத்தனை பெரிய தொகையின் இப்போதைய பெறுமதியைக் கணக்கிட்டால் யாருக்கும் புல்லரிக்கும். அவ்வாறு அப்பொழுது ஆரம்பித்த தண்ணீர்த் திட்டத்தால் இப்பொழுது ஆத்தூரிலிருந்து நல்ல குடிநீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு காயல்பட்டின தண்ணீர்த்திட்டத்திற்கு அள்ளி வழங்கிய அவர்கள், இன்று தமிழ்நாட்டில் சரித்திரம் சமைத்துவிட்ட சத்துணவுத் திட்டத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தார்கள்.
Reviews
There are no reviews yet.