Description
செடியிலும் கொடியிலும் பூக்கும் மலர்கள் இயற்கையின் அழகான விழிப்புகள். என் சிந்தனையில் மலர்ந்த வண்ணப் பூக்களோ திரைக்கலையின் சுவையான விழிப்புகள். “இந்த வண்ணப் பூக்களோடு சேர்த்து வாசகர்களின் கண்களும் விழித்து மலரட்டுமே. அப்படி விழித்து மலர்ந்த கண்களால் இந்த உலகையும், அதனோடு ஒன்றி வளரும் திரையுலகையும் பார்க்கட்டுமே” என்ற எனது மனத்துடிப்பில் விளைத்தவை தான் இந்த மலர்க்குலியஸ். திரையில் தோன்றுவதை எல்லோரும் தான் ரசிக்கிறர்கள். அதனையே திறனாய்வுடன் ரசித்தால் எப்படி இருக்கும்? சித்திரம் பற்றியும், அதள் சிக்கலான நுணுக்கங்கள் பற்றியும், அதிலுள்ள வண்ணச் சேர்க்கைகள் பற்றியும் நன்றாக அறிந்த ஒருவர் ரவிவர்மாவின் படைப்பை ரசிப்பது போல் இருக்கும் இல்லையா.
Reviews
There are no reviews yet.