Description
“இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு’ எனும் தனிப் பெரும் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமியத் தமிழிலக்கியங்கனின் தொகுப்பு, பகுப்பு பின் ஆய்வு பற்றிய செய்திகளை கடந்த ஐம்பது ஆண்டுகனில் மதிப்பீடு செய்வதன் பயனாக பல அரிய உண்மைகளை அறிய முடிகிறது. 1950-க்கு முற்பட்ட காலம் வரையில் முஸ்லிம்களின் அளப்பரிய தமிழ்த்தொண்டு பற்றிய கருத்துக்களை அவற்றை முதுசொப்பமாகக் கொண்ட முஸ்லிம்களே மறந்துவிட்ட நிலையே நிலவியது. முஸ்லிம்களின் தமிழ்ப்பணி என்றவுடன் உமறுப்புலவரையும் மஸ்தான் சாகிபையும் மட்டுமே இனம் காட்டி வந்த தமிழுலகு 1950-க்குப் பின் தமிழ் முஸ்லிம்களுக் கிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களையும் அவர்கள் தம் அரிய தமிழிலக்கியப் படைப்புக்களையும் இனம் கண்டு கொள்ளத் தொடங்கியது.
Reviews
There are no reviews yet.