Description
ஸெகலகுண ஸம்பன்னர்களான ஸௌனகாதி முனீந்திரர்கள் அவரவர்கள் நித்தியானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு மந்தஹாஸமான வதனங்களுடையவர்களாய் பூலோகத்தில் 108 திருப்பதிகள் உள்ளன. அவற்றில் சுயம் வியக்தமான எட்டு திருப்பதிகளில் பிரத்யக்ஷ வைகுண்டமென்று பிரஸித்தி பெற்று பக்தர்களுக்கு அவரவர்கள் இஷ்டார்த்தமான பலன்களை கொடுத்து வரும் வேங்கடாசல மகாத்மியத்தைக் கர்ணாம்ருதமாய் கேட்டு ஆனந்தப்பட கோரினவர்களாய் பௌராணி கோத்தமரான சூதமுனீந்திரரைப் பார்த்துச் சொல்லுகிறார் மஹாத்மா ! பூலோகத்தில் உள்ள நூற்றி எட்டு திருப்பதிகளில் மோக்ஷபிரதமான வேங்கடாசல மஹாத்மியத்தைக் கேட்டு ஆனந்திக்க பிரார்த்திக்கின்றோம் என்று வினவ சூத முனீந்திரர் வேங்கடாசல மகாத்மியத்தைச் சொல்லத் தொடங்கினார்.
Reviews
There are no reviews yet.