Description
மனிதர் மனிதர், மாமனிதர் மௌலானா முஹம்மது அலி ஜௌஹரின் வரலாறு இந்திய வரலாற்றிலே பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்படத்தக்க ஒரு வீர ஏடு; ஈடும் இணையுமற்ற அவருடைய வீர வாழ்க்கை ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்ற வேண்டிய அழகிய அடிச்சுவடு. ‘இறைவன் கட்டளையிடும்போது நான் முதலிலும் ஒரு ‘ முஸ்லிம்; இரண்டாவதும் ஒரு முஸ்லிம்; கடைசிவரை ஒரு முஸ்லிம். முஸ்லிமைத் தவிர வேறல்ல. ஆனால், இந்தியா பற்றிய வரையில் நான் முதலிலும் ஓர் இந்தியன்; இரண்டாவதும் ஓர் இந்தியன்; கடைசிவரை ஓர் இந்தியன். இந்தியனைத் தவிர வேறல்ல,’ என்று கூறி அவ்விதமே செயலாற்றிச்சென்ற பெருந்தகை அவர்.
Reviews
There are no reviews yet.