Description
நீ ஒவ்வொரு நாளில் இரவில் கனவு காணும் போது வாயில் ஏதாவது சொல்லிக்கொண்டே தூங்குகிறாய். உனக்கு அப்போது ஒன்றும் தெரியாவிட்டாலும், அம்மாவோ அப்பாவோ அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொழுது விடிந்த பிறகு உன்னைப் பார்த்து, ‘ஏனப்பா ! நீ என்ன கனவு கண்டாய்? இரவெல்லாம் பழனி பழனி என்று வாய் பிதற்றினாயே! யாரோ பழனியைத் திரும்பத் திரும்பக் கூப்பிட்டாயே !” என்று கேட் கிறார்கள். அப்போதுதான் உனக்கு அது தெரிகிறது. ” இலலை அம்மா ! பழனி என்று பள்ளிக் கூடத்தில் ஒரு பையன் இருக்கிறான். அவன்தான் என் பக்கத்துப் பையன். அவன் கனவில் வந்தான்’ என்று நீ சொல்வாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? நம்முடைய வாழ்க்கையில் மொழி எவ்வளவு வேரூன்றிவிட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நம்மை மறந்து தூங்கும்போதும் விட முடியாத பழக்கமாக மொழி ஊறிப்போயிருக்கிறது. நன்றாக எண்ணிப்பார். குழந்தையாக இருக்கும் போது மனிதன் முதலில் கற்றுக்கொள்வதும் மொழிதான். தள்ளாத கிழவனான பிறகு மறக்காமலிருப்பதும் மொழிதான்.
Reviews
There are no reviews yet.