Description
அவர் பி.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர். இண்டர்மீடியட் வகுப்பிலும் பி. ஏ. வகுப்பிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் களைப் பற்றிக் கூறினார். அவருடைய விருப்பப் பாட மாகிய கணக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் குறிப்பிட் டுப் புகழ்ந்தார். விஞ்ஞான ஆசிரியர்களைப் பற்றிச் சில குறைகளை எடுத்துச் சுட்டினார். கல்லூரித் தலை வரைப் பற்றியும் குற்றமும் குணமுமாகச் சொன்னார். இவ்வாறு முறையாக எல்லாரைப் பற்றியும் சொல்லியும் மொழியாசிரியரைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று திகைத்து அவரே கூறுவார் என எதிர்பார்த்துக்கொண் டிருந்தேன். அதற்குள் அவர் பச்சையப்பன் கல்லூரிக்கு அடுத்த உணவுவிடுதியைப் பற்றிப் பேச்சை மாற்றத் தொடங்கினார். உடனே நான் என் ஐயத்தைப் போக்கிக்கொள்ள விரைந்தேன்.
ஆமாங்க: எல்லாரைப் பற்றியும் சொன்னீர்களே!மொழியாசிரியரைப் பற்றி ஒன்றுமே பேசாமல் விட்டுவிட்டீர்களே! நீங்கள் பி.ஏ. படித்தவர் ஆகையால், இண்டர்மீடியட், பி. ஏ. இரண்டிலும் மொழிப்பாடம் விடாமல் இருந்திருக்குமே “,என்று” கேட்டேன்.
Reviews
There are no reviews yet.