Description
திண்டுக்கல் எம்.எம். அனீபா அவர்கள் எழுதியுள்ள அருமையான சிறுகதைத் தொகுப்பினைப் படித்து மகிழ்ந்தேன். இத்தொகுப்பில் உள்ள எல்லாச் சிறுகதைகளும் பெரியதொரு கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்டவை. அவை படிப்பவர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. சமுதாயப் போக்கில் பெரிய மாறுதலைக் காணத் துடிக்கின்ற கதாசிரியரின் நல்ல நோக்கும் வெளிப்படுகின்றது. உதாரணமாக ‘பெரிய இடத்துக் கனவு’ என்ற சிறுகதை வரதட்சணை வாங்க நினைக்கும் பெற்றோருக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளது. ‘பொய்யான ஒரு நாடகமாடித்தன் மனைவியின் வரதட்சணை வாங்கும் ஆசையைக் கைவிடும்படிச் செய்துவிடுகிறார். புத்தி கூர்மை வாய்ந்த கணவர் காதர் பாட்சா.
Reviews
There are no reviews yet.