Description
ஒரிசாக் கடற்கரையினின்று குமரிமுனைவரையும், இம்முனையினின்று மலையாளக் கடற்கரை யூடே மேல்நோக்கிக் கொச்சிவரையும் தமிழ் மொழி பேசப்படுகிறது. இந்நிலப்பகுதியில் உள்ள புலவர்கள் செய்யுள்வடிவில் நூல்கள் இயற்றுகின்றனர். இதனால் பெரும்பாலோர்க்குச் செவ்வையாகப் படிக்கத் தெரிந்திருந்தும் அவற்றின் பொருள் விளக்கமாவதில்லை.
வடபாலில், கோதாவிரியாறு பீஜப்பூர் எல்லை தொட்டுக் குமரிமுனைப் பகுதியின்கண் உள்ள தொடர்மலைகளுள், மிகப் பெரியதொன்றின் (ஆனைமுடி 8850 அடி) கீழ்ச்சாரல் வரையும், தெற்கிலும் கிழக்கிலும் கடற்கரைகளால் சூழப்பெற்றுப் பரந்து விளங்கும் மாபெரும் நாடொன்றுளது. இதனுள் ஒரு பகுதி “பாண்டி. நாடாகும். இதனை அராபியர் கருநாடகம் எனப் பெயர்வழங்கினர். இம்மாநிலத்தின் கடற்கரைப் பாங்கரிலும் உட்புறத்தேயும் அரசுகள் பல நிறுவம் பெற்றிருந்தன. அவற்றின் பெயர்கள் இன்றளவும் நிலவுகின்றன. அரியணை களோவெனில் அடியோடு அழிந்து போயின.
Reviews
There are no reviews yet.