Description
அவ்வாறே விழாவும் தொடங்கிற்று, நாடகமகளிர், தம் ஆடல் பாடல்களால் அனைவரையும் இன்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் ஆடலரசியாகிய மாதவியோ, தன் காதற் கணவனாம் கேரவலன் கொலையுண்ட கொடுந்துயரத்தால், பற்றற்ற நிலையில், ‘தன்மகள் மணி மேகலையொடு உழன்றாளாதலின், விழாவிற் கலந்து கொள்ளவில்லை. இதனைக் கண்ட மாதவியின் தாயாகிய சித்திராபதி, தன்மகளின் தோழி வயந்தமாலையை அழைத்து, ‘இவ்விருவரும் வாராமையால் இவ்வூரார் கூறும் அலர் எடுத்துரை’ என்றனர். அவளும் அவ்வாறே சென்று மாதவிபால் கூறினாள். அதற்கு மாதவி “காதலன் உற்ற கடுந் துயர் கேட்டுப், போதல் செய்யா உயிரொடு நின்றேன் ! மணிமேகலை யும், மாபெரும் பத்தினி மகளாவாள் ! ஆதலின் அவளும், அருந்தவப் படுத்தல் அல்லது, யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் ! இதனைச் சித்திராபதிக்குச் செப்பு!” என்று கூறிவிட்டாள். வயந்தமாலையும், கடலில் வீழ்ந்தவர் போலக் கையற்றுப் பெயர்ந்தனள்.
Reviews
There are no reviews yet.