Description
நூல் முழுவதும் காணப்படும் அமைப்புமுறை காலவரிசையை அடியொற்றியதாகும். பொருள் பாகுபாடும், தமிழ்நூல் (அல்லது கட்டுரை) முதலிலும் பிற மொழிகளில் வந்தவை அடுத்து வரும் அமைப்பும், நூல் வடிவில் வந்தவை முதலிலும் கட்டுரையாக மட்டும் இருப்பவை பின்னும் தொகுக்கப்பட்டுள்ள வைப்பு முறையும் நூல் முழுவதும் காணப் படும். இந்த நூல் தொகுக்கப்பட்ட கால அளவிற்கு உட்பட்டே (நவம்பர் 1975) இதில் உள்ள செய்திகள் அமைகின்றன. சில செய்திகள், நூல் முடியுந்தறுவாயில் கிடைத்ததால் அவை குறிப்புகள் (பச்சம் 34C-343) என்று இறுதியில் இணைக்கப் பட்டன. மு.வ. அவர்களைப் பற்றி இனிமேல் வரவிருக்கும் சில நூல்கள் பற்றியும், இதற்குமுன் குறிப்பு விளக்க நோக்கில் வெளியான மு.வ, படைப்புக்கள் பற்றிய செய்திகள் பற்றியும் நூலின் இறுதீயில் காணலாம். மிகப்பெரிய இப்பணியைச் செம்மையுறச் செய்தீடக் குறிப்புகள் தந்து உதவிய நண்பர்கள், அறிஞர்கள் ஆகியோரை அந்தந்தச்குறிப்புகள் இடம்பெற்ற பகுதிகளில் சுட்டியுள்ள அமைப்பு நூல் முழுவதும் காணப்படும்.
Reviews
There are no reviews yet.