Description
ஒருநாள் ஹஸ்ரத் உஸ்மானுடைய வேலையாட்களில் ஒருவன் பெரும்பிழை செய்தான். அந்த வேலைக்காரனுக்குப் புத்திபுக்கட்டும் நோக்கத்துடன் அவன் காதை அவர் முறுக்கினார். வேலைக்காரன் வலியினால் “ஹா!” என்று அலறினான். பெரு மூச்சுவிட்டான். ஹஸ்ரத் உஸ்மான் உடனே அவனை விட்டு விட்டார். “உன் பெருமூச்சு என் உள்ளத்திலே அம்பைப் போல் பாய்ந்துவிட்டது! நான் உன் காதை எவ்வாறு முறுக்கினேனோ, அவ்வாறே நீயும் என் காதைப் பிடித்து முறுக்கிவிடு! பதிலுக்குப் பதில் செய்து உன் மனத்திலிருக் கும் வேதனையை நீக்கிக்கொள்!” என்று அந்தப் பணி மகனிடம் கேட்டுக்கொண்டார்.
Reviews
There are no reviews yet.