Description
தமிழக அரசு என்னைத் தேர்ந்தெடுத்ததன் பேரில், மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரெஞ்சு நாட்டுக்கும் சென்றேன். இந்த இரு பயணங் களையும் தொடர்ந்து பிரிட்டனுக்கும் சென்றேன். மாஸ்கோவி லிருந்து பாரிஸ் வரும் வழியில் விமானத்தில் இருந்தபடியே போலந்து நாட்டின் தலை நகராகிய வார்சாவையும் கண்டு களித்தேன். வார்சா விமான நிலையத்தில் இறங்கி சோஷலிசம் தழைக்கும் அந்த நாட்டின் மண்ணை மிதிக்கும் பேற்றினையும் பெற்றேன் எனது ஐரோப்பியச் சுற்றுலாவை முடித்துக் கொண்டு லண்டனி லிருந்து இந்தியாவுக்குத் திரும்பும் போது வழியில் மேற்கு ஜெர்மனியின் தொழில் நகர மான பிராங்க்பர்ட் நகரையும், இத்தலியின் தலையிட மாகிய ரோம் நகரையும், லெபனான் நாட்டின் தலையிட மான பெய்ரூட் நகரையும் கண்டுகளித்தேன்.
Reviews
There are no reviews yet.