Description
நடு ஹாலில் பாய் விரிக்கும் சப்தமும், அதைத் தொடர்ந்து அங்கு அதிகரித்த ஆரவாரமும் நோன்புதிறக்கும் நேரம் நெருங்கி விட்டதை அப்துல்லாசாராவுத்தருக்கு நினைவூட்டியது.ஓதிக் கொண்டு இருந்த திருக்குர்ஆனை மூடி வைத்து விட்டு, முழங்காலை தடவி விட்டுக் கொண்டபடி மெதுவாக எழுந்த அப்துல்லாசாவின் முகத்தில் மலர்ந்த புன்னகை அதிக நேரம் நீடிக்கவில்லை.ரம்தான் மாதம் இன்றுடன் முடிவடைகின்றது. முப்பது நாட்கள் தொடர்ந்து நோன்பினை நோற்று இறைவனின் கட மையை நிறைவேற்றி முடித்த நிம்மதி உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பி இருந்தாலும் அவரது முகத்தில் ஏனோ ஒருவித விரக்தி தோன்றியது.”ஓய் ராவுத்தரே”வாடிப் போயிருந்த முகத்தில் உயிரோட்டம் தெரிந்தது.
Reviews
There are no reviews yet.