Description
மனம் நிறையக் களிப்பும், கைகள் நிறைய ஆர்வத் துடிப்புமாக மேஜை மேல் இறைந்து கிடந்த அந்தப் புத்தகங்களை வாரி மார்போடு அணைத்துக் கொண்டாள். அறைக் கதவு மூடியிருந்தது. தன்னை -தன் ஆர்வத்தை யாரும் எங்கிருந்தும் பார்க்கவில்லை என்ற துணிவு, நெஞ்சுக்குள் எல்லையில்லாது பரவும் மணமும் ஒளியும் கொண்டு ஏதோ ஒரு பூப்பூப்பதுபோல் இனம் விளங்காத குறுகுறுப்பு. ‘மகிழ்ச்சிகரமான இந்த உல்லாச நினைவுகளில் மிதந்து கொண்டே இரு’ என்று உள்ளத்தின் அடி மூலையிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறதா? உடம்பில் ஏதோ ஒரு மதமதப்பு. மார்கழி மாதத்து வைகறையில் சுனைத் தண்ணீரில் குளித் தெழுந்த மாதிரி ஒரு புனிதம்; ஒரு சிலிர்ப்பு; ஒரு துடிப்பு. கட்டுக்கு அடங்காத ஆவலுடன் உறையிலிருந்து மறு படியும் நவீனனின் கடிதத்தை எடுத்துப் படித்தாள் நளினி- முத்துமுத்தாய்த் தனித்தனியாய் எழுதப்பட்ட நாலே வரிகள்.
Reviews
There are no reviews yet.