Description
நாவல் என்கின்ற இலக்கியவடிவம், நவயுகத்தின் காவிய வடிவம் என்கின்றனர் இலக்கிய விமர்சகர்கள். சமுதாயத்தின் மாற்றத்திற்கேற்ப இலக்கிய வடிவங்களும், அவற்றின் உருவங்களும் மாற்றமடைகின்றன. இதன் காரணமாக சில வடிவங்கள் மாய்ந்துபோகும், சில இலக்கிய வடிவங்கள் அந்த மடிவினின்றும் புதிதாகத்தோன்றவும் செய்யும். சுமார் இரண்டு நூற்றாண்டு முன்புதோன்றிய நாவல் இலக்கிய வடிவம் இன்றும் புத்துயிரும் பொலிவும் பெற்றுத் திகழும் தன்மைத்தது. ஏனெனில், இதர இலக்கிய வடிவங்களைப் போன்று ஒரு மனிதனுடையவோ, ஒரு சம்பவத்தினுடையவோ பகுதியையோ, கோடியையோ சித்தரிப்ப தன்று. ஒரு சமுதாயத்தினுடைய மாற்றத்தையும் இயக்கத்தையும் முழுமையாக சித்தரிக்கும் தன்மையும் வன்மையும் கொண்டது நாவல் இலக்கியம். இந்த இலக்கிய உருவத்தை நமது எழுத்தாளர்கள் எவ்வளவு தூரம் வெற்றியாகக் கையாண்டுள்ளனர் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றாகும்.
Reviews
There are no reviews yet.