Description
தமிழிலே வரலாறு எழுதுவது என்பது பெரும்பாலும் மொழிபெயர்ப்பாகவே அமைகின்றது. இது தமிழுக்கே இழுக்குத் தேடுவதாகும். வரலாற்றின் ஆதாரங்கள் எந்த மொழியிலிருந்தாலும் அவற்றைக் கோவை செய்து அவற்றின் கருத்துகளை மட்டும் நல்ல தமிழிலே எழுதுவது இன்றும் நமக்குப் புதியதோர் கலையாகவே இருந்து வருகின்றது. இக்குறையைப் பூர்த்தி செய்யும் முறையில் ஆசிரியர் இந்நூலின் தெளித்தெடுத்த வரலாற்றை இனிய தமிழிலே எழுதிக் காட்டியுள்ளார். தமிழ் நாட்டின் வரலாற்றில் இந்நூல் ஒரு முக்கியப் பகுதியை விவரிப்பதாகும். கி.பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் தமிழ் நாட்டை இன்னல் சூழ்ந்தது; வணிகராய் வந்த ஆங்கிலேயர் நாட்டையே கைப்பற்ற எண்ணிய காலம் அது.
Reviews
There are no reviews yet.