Description
தளிரும் பூவும் சுழன்று சுரையிலே மோதிச் செல்லும் அந் நதியின் அழகிலே கண்ணையும் சுருத்தையும் பறி கொடுத்தவர்களாய்த் தலை நிமிர்ந்து இறுமாந்து நடந்து செல்லும் அவ்விருவரும் ஆண் சிங்கம்போல் மிடுக்கு உடையவர்களாய்த் தோன்றினாலும் அவர்கள் வீரர்கள் அல்லர். ஆம்! வில்லும் வாளும் கொண்டு களத்திலே முன்னின்று எதிர்பொரும் வீரர் அல்லர் என்பது உண்மைதான்; ஆனால் உலக வாழ்க்கையாகிய அரங்கத்திலே மனம், மொழி, மெய் இவற்றால் முக் குற்றங்களையும் வேர் அறுத்த தவ வீரர்கள் அவர்கள். அவர்களுடைய பார்வையிலே தவ ஒளி வீசுகிறது. நெடுந்தூரம் நடந்துவரும் அவர்கள் நடையிலே சிறிதும் தளர்ச்சி இல்லை; விடைபோன்று மிடுக்குடன் நடந்து வருகிறார்கள். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? நடையில் தளர்ச்சி இல்லாவிட்டாலும் ஒருவாறு. அவர்கள் வரும் வழியை நோக்க, நெடுந்தூரத்திலிருந்து, வருகிறார்கள் என்று அறியலாம் .
Reviews
There are no reviews yet.