Description
மங்கலப் பாண்டிய நாட்டின் தலைநகராம் இம்மாமதுரையில்,
‘மதுரைத் திருவள்ளுவர் கழகம்’ தோன்றி, ஆண்டுகள் இருபத்தைந்து ஆகின்றன. இதன் வெள்ளி விழாவை 1967 சூலைத் திங்கள் 6 முதல் 10 முடிய ஐந்து நாட்கள் மிகச் சிறப்புறக் கொண்டாடுகின்றோம். இவ்விழாவின்போது திருக்குறள் மாநாடு, இசைத் தமிழ் விழா, கவியரங்கம், பட்டிமன்றம், திருக்குறட் கருத்தரங்கு, நாடகத் தமிழ் விழா ஆகியனவும், இன்னிசை, நடனம், நாடகம், பரிசளிப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளன. இவை தவிரக் கழக நிதிக்கெனத் தமுக்கம் கலை யரங்கில் இன்னிசை, நாடக நிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கின்றன.
Reviews
There are no reviews yet.