Description
பெருந்திணை அகப்புறப் பகுதிகள் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன. இச்செய்யுள் நூல் முச்சங்கள்களுக்குப் பின் தமிழை வளர்க்க முன்வந்த பாலவநத்தம் சமீன் கார் உயர்திரு. பாண்டித்துரைத்தேவர் அவர்கள் 1901 இல் நிறுவிய மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வுகளில் பிரவேச பண்டிதத் தேர்வுக்குப் பாடமாக முதலில் அமைக்கப்பெற்றது. இதற்கொத்த சிறப்பில் அமைந்த வைணவக்கலம்பகம் “அழகர் கலம்பகமாம்.” இவ்விரு கலம்பகங்களையும் 51 ஆண்டுகட்கு முன் பயின்ற யான் அந்நூற்களில் கண்ட அருங்கருத்தமைந்த செய்யுட்கள் இன்றும் எவ்வவையோரும் கேட்டுவக்கும் முறையில் இயம்பப்பெறுகின்றன.
Reviews
There are no reviews yet.