Description
“கொந்தார் குழல்மணி மேகலை நூல்நுட்பம் கொள்வதெங்ஙன்?” என்றும், அம்பிகாபதி என்பவரால், அம்பிகாபதிக் கோவைக்கண், “மாதவி பெற்ற மணிமே கலைநம்மை வாழ்விப்பதே” என்றும் தொனி நயம் படப் போற்றி யுரைத்த அருமையுடையது ; அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; எனைச் சீவக சிந்தாமணி, சிலப் பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தி யது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க, அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது; காவிரிப்பூம் பட்டினம், வஞ்சி,காஞ்சி முதலிய பெரு நகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது ; இயற்கை யழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தரு மங்களையும், பண்டை நாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது. தொடர்ச்சி
முப்பெருங்காவிய ஆராய்ச்சி யாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளான மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவை ததும்பச் சொல்லும் சீர்மை யுடையதுமாகும்.
Reviews
There are no reviews yet.