Description
மக்தூம் மறைவுக்குப் பிறகு கிஷன்சந்தர் எழுதியுள்ள கட்டுரை கவிநயம் நிறைந்த அஞ்சலி, கிஷன்சந்தரைப் பற்றி அப்பாஸ் எழுதியுள்ள கட்டுரை இலக்கியத் திறனாய்வில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. புனைவியல் வாதிகளின் “இரண்டு சன்னல்கள்’’ அணுகுமுறையை விளக்குகிறது. இக் கட்டுரை கிஷன் சந்தரைப் பற்றி முழுமையாள விமர்சளம் அல்ல, ஏனென்றால் கிஷன்சந்தரின் மறைவுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1955ஆம் ஆண்டில் அப்பாஸ் இக் கட்டுரையை எழுதினார். மக்தூமைப் பற்றி அவருடன் பல அரசியல் போராட்டங்களில் டாக்டர் பங்கெடுத்த ராஜ்பகதூர் கெளர் எழுதியுள்ள கட்டுரையில் வாழ்க்கை விவரங்களையும் இலக்கியத் திறனாய்வையும் காண்கிறோம். இக்கட்டுரை ராஜ்பகதூர்கௌர் எழுதிய Makhdoon A Memoir என்னும் பிரசுரத்தின் சுருக்கமாகும். ராகுல் ஜியைப்பற்றி டாக்டர் வி. எஸ்,நரவனே எழுதியிருக்கின்ற தீண்ட கட்டுரை மிகவும் சிறப்பானது.
Reviews
There are no reviews yet.