Description
மேல்தீசைக்கும் கீழ்த்திசைக்கும் பாலமாய் அமைவது போலவே, இக்கால உலகுக்கும் வருங்கால உலகுக்கும் இடையே ஒரு நல் ஏணியாய் இலங்குகின்றது. இயல் நூலாராய்ச்சிக்கும் உண்மைச் சமயத்துக்கும், பொருளியலுக்கும் அருளியலுக்கும் உள்ள உள்ளார்ந்த தொடர்புகளைக் காட்டி மனிதப் பண்புகளிடையே விலங்குப் பண்பு கண்டு ஒதுக்கி, மனிதப்பண்பு அல்லது தெய்விகப் பண்புகளை வளப்படுத்தும் வகையில் அவர் காந்தியடிகளுக்கும் திருவள்ளுவர் பெருமானுக்கும் காலத்துக் கேற்ற புதுவிளக்கம் தருகின்றார்.காந்தியடிகளின் ஆன்ம தத்துவத்தை அறிவாராய்ச்சியுடன் கண்டுணர விரும்புபவருக்கும், பண்டை வள்ளுவர் உள்ளுறையை இந்நாளைய அறிவின் உதவிகொண்டு காண விரும்புபவருக்கும், அவர்கள் இருவரும் கனாக்கண்ட தூய பொதுவுடைமை நெறியை மேனாட்டுத் தொழில் முதலாளித்துவ வாடையினின்று பிரித் தெடுத்துக் கண்டு வருங்கால உலகை அவ்வழியில் உய்க்க விரும்பு பவர்களுக்கும் அவர் ஏடுகள் பொதுவாகவும், ‘மக்களும் அமைப்புக்களும்’ (Men and Systems) என்ற இச் சிறுநூல் சிறப்பாகவும் ஓர் ஒப்பற்ற கருவூலமாய் உதவும்.
Reviews
There are no reviews yet.