Description
“கான்ஸல் செய்து தந்தி கொடுத்து விடட்டுமா? டகோடா தான் போகும்கிறாங்க. ‘ப்கீரண்ட்ஷிப் பாயிருந்தா ஒண்ணே முக்கா மணிலே போயிடலாம். இப்ப மணி மூணே முக்கால். டகோடா இரண்டரை மணி நேரம் பிடிக்கும். நீங்க மதுரை போறப்பவே ஆறேகால் ஆயிடும். ஆறரைக்கு ‘ஃபங்ஷன்’னு புரோக்ராமலே போட்டிருக்கு. ஏர் போர்ட்டிலேருந்து ஐம்பத்தெட்டு மைல் போகணும். ‘ஜீப்’லே எவ்வளவு வேகமாப் போனாலும் ஒண்ணரை மணி நேரத்திற்கு மேலே ஆகுமே?” “கண்டிப்பா போயாகணும். ப்ளேன் லேட்டானாலும் எட்டுக்குள்ள போயிடலாம்… ஃபங்ஷன்
நடந்துகொண் டிருக்கும் போதே போய்ச்சேர்ந்து கொள்ளலாமே…” என்றார். பிரபல இரும்பு வியாபாரி நாகநாதன். அவர் பிரயாணத்தில் உறுதியாயிருக்கிறார் என்பது தெரிந்ததும் காரிலிருந்து சிறிய அழகிய சூட்கேஸைக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான் காரியதரிசி.
Reviews
There are no reviews yet.