Description
மனந்திறந்து சொல்வதென்றால் தமிழில் கவிதையின் தரிசனத்தை முதன் முதலாக லா.சா. ராவின் சொற்கோலங்களில் தான் என்னால் இனங்கான முடிந்தது. அவன் காதோரம் கோபரத்தம் குரு குருத்தது என்று அவர் எழுதியபோதும் முதலிரவையும், ஒரு பெண்ணையும் தொடர்பு படுத்தி “இதுவே. எனது விஸ்வரூபம்; இதுவே எனது திக்விஜயம்” – என்று அவளிடம் வாக்குமூலம் வாங்கியபோதும் லா.சா. ராவின் உரைநடையில் கவித்துவம் உறைந்து கிடப்பதை நான் பார்த்தேன். சங்க இலக்கியங்களில் வாழ்க்கையின் காட்சிகளில் ஒப்பணையற்ற கிராம அழகை காட்டிய எதிர்த்தா சுவிதை வீச்சு எனக்குள் இலக்கியகனத்தை உருவாக்கியது. திருவள்ளுவரை உலகின் சிறந்த சிந்தனையாளராக படித்தபொழுது என் கவிதை மனம் உலர்ந்தது. கம்பனின் கற்பனையழகு என் இதயத் துடிப்பினால் குற்றால நீர்வீழ்ச்சியின் ஓசையைக் கேட்கவைத்தது.
Reviews
There are no reviews yet.