Description
ஈடுபாட்டுடன் வாசிப்போருக்கு பின்னிணைப்பில் நிகழ்வுகள் குறிப்புகள் – விளக்கங்கள் என்றொரு தனித் தொகுதி இணைக்கப் பட்டிருக்கிறது.ஏந்தல் நபி பெருமானாரைப் பற்றிச் சுருக்கமாகவும், ஆதார பூர்வமாகவும் இந்நூல் அமைந்துள்ளது குறித்து சென்னை மக்கா மஸ்ஜிதின் தலைமைஇமாம் மவ்லவி அல்ஹாஜ் – சம்சுதீன் காஸிமி எம்.ஏ. முன்னுரையில் பெருமை படுத்தியுள்ளார்.படிக்க ஆரம்பித்தால் முடிக்கிறவரை நபி முஹம்மது (ஸல்)அவர்களின் வரலாறு வாசிப்போரை நெகிழ்த்துவதாக சென்னை ஜும்மா பள்ளி இமாம் அல்ஹாஜ் எம். கமால் முஸ்தபா மன்பஈ முதல்வாசிப்பாளராக இந்நூலுக்கு அமைந்து கருத்தூக்கம் காட்டினார்.பெருமானாரின் நபிமொழிகளைத் தமிழில் தரும் ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் தலைமை மொழிபெயர்ப்பாளர் மவ்லவி பேராசிரியர்ஏ. முஹம்மது கான் பாகவி இறுதித் திருத்தங்கள் செய்து கொடுத்த போது இந்நூலின் நடைநயத்தைப் புகழ்ந்து பூரிக்கச் செய்தார்.
Reviews
There are no reviews yet.