Description
அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு நிற மதுரைச் ‘சிந்தோடி’ தாவணியைத் தன் துணைவிக்குப்பொறுக்கியெடுத்த போது அப்துல் காதரின் முகமெல்லாம் மலர்ந்தது. அதற்காக அறுபது ரூபாயை அலட்சியமாக வீசி எறிந்துவிட்டு, அதன் சரிபாதி விலையில் ஜிமிக்கி போட்ட நாகூர்ப்புடைவையைத் தன் தங்கைக்காக அவன் பேரம் செய்தபோது அவன் முகம் ஏனோ சுளித்து விட்டது! மீதியிருந்த பணத்தில் தன்னைப் பெற்றெடுத்தவள் என்ற தோஷத்தின் காரணமாக ஒரு சாதாரண ‘வாயில்’ புடைவையைத் தன் தாய்க்காக மிக்க அலுப்புடன் வாங்கிக் கொண்டான். இந்த மூன்று பொருள்களையும் ஒரே மூட்டையாகக்கட்டிக்கொண்டு பல்லாவரம் போகும் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். காலியாக இருந்த பக்கத்து மூட்டையை வைத்துவிட்டு, நெற்றி வியர்வையை விரலினால் சுண்டிவிட்டான், பஸ் புறப்பட்டது.
Reviews
There are no reviews yet.