Description
நீங்கள் யாவரும் அடியோடு முடிந்து ஒழிவது முடிவாய் முடிந்து நின்றது; நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் நெஞ்சத்திமிரால் துணிந்து பேசுகின்றாய்! என இந்தி சித்தினுடைய பேச்சின் பிழை பாட்டையும் பிழையாமல் நாசம் அடைவதையும் விநயமாய் இதனால் எடுத்துக் காட்டினான். தருமமே துணை என்று தரும மூர்த்தியான இராமனை நான் சரணடைந்துள்ளேன்; விழுமிய அரணம் என்று உழுவலன் போடு மருவி மகிழ்ந்துள்ள என்னை இழிவு பல கூறி இகழ்ந்து நிற்கின்றாய்; மனத்திமிர் கொண்டு மடமை மண்டிக் கடமையை மறந்து கடுத்துப் பேசுகின்ற உனக்குச் சில உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆசையால் நான் தொடுத்துச் சொல்லுகின்றேன் என்று தொடர்ந்து பேசினான்.
Reviews
There are no reviews yet.